Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தலைக்கு ஏறிய போதை… சென்னையே திரும்பி பார்த்த சம்பவம்… வைரலாகும் போதை ஆசாமி…!!!

சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடி நடு ரோட்டில் சென்ற போதை ஆசாமி மாநகர பேருந்தை வழிமறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் வடிவேலு மாயி படத்தில் மதுபோதையில் பேருந்தை வழிமறித்து ரகளை செய்வதுபோல, சென்னை குரோம்பேட்டையில் போதையில் தள்ளாடிய ஒருவர், மாநகர பேருந்தை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டுள்ளார். சென்னை குரோம்பேட்டை போலீஸ் நிலையம் அருகே இருக்கின்ற ஜிஎஸ்டி சாலையில் போதை ஆசாமி ஒருவர் நடுரோட்டில் படுத்து கொண்டு கூச்சலிட்டுக் கொண்டிருந்தார். அதன்பிறகு எழுந்து நடுரோட்டில் தள்ளாடிக் கொண்டே வேகமாக நடந்து சென்றார். அப்போது எதிரே வந்த மாநகர பேருந்தை தனது கைகளால் மரித்தேன் நிறுத்துவதற்கு முயற்சி செய்துள்ளார்.

அதனைக் கண்ட பேருந்து ஓட்டுனர் உடனடியாக பேருந்தை நிறுத்தி உள்ளார். பேருந்து நின்றதை கண்ட போதை ஆசாமி, தானே தனது கைகளால் பேருந்தை தடுத்து நிறுத்தியது போன்று ஆரவார கூச்சலிட்டார். அதுமட்டுமன்றி பேருந்து ஓட்டுநரிடம் ரகளை செய்தார். அதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் அனைத்தும் நடுவழியில் நின்றதால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதன் பிறகு அந்த போதை ஆசாமி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

அந்த காட்சியை செல்போனில் வீடியோவாக படம்பிடித்த சிலர், சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அதனை பார்த்த குரோம்பேட்டை போலீசார், அந்த போதை ஆசாமியை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் நாகல்கேணி பகுதியில் வெங்கடேசன் என்ற அந்த போதை ஆசாமியை போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் பிறகு அவரை எச்சரித்து திரும்ப அனுப்பினார்.

Categories

Tech |