கோபி அருகே குடிபோதையில் தாயை அடித்து மகன் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோபியை அடுத்த பா. நஞ்சகவுண்டன்பாளையத்தை சேர்ந்த குருநாதன் , மொழுகாள் தம்பதியரின் மகன் கருப்புசாமி (36). இவருக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது. குடிபோதையில் தன் தாய் மொழுகாளை அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். கருப்பசாமிக்கு பயந்த மொழுகாள் மேவானியில் உள்ள தன் உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனால் சாப்பாட்டுக்கு வழியில்லாத கருப்பசாமி குடிபோதையில் மேவானியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று மொழுகாளை வீட்டிற்கு வரும்படி அழைத்துள்ளார். ஆனால் மொழுகாள் வீட்டிற்கு வர மறுத்ததால் அவரை குச்சியால் தாக்கினார்.
இதனால் படுகாயமடைந்த மொழுகாளை ஆட்டோவில் தனது வீட்டிற்கு மயங்கிய நிலையில் கொண்டு சென்றார் கருப்பசாமி. ஆனால் அங்கு சென்றடைந்த சிறிது நேரத்தில் பரிதாபமக மொழுகாள் உயிரிழந்தார். இந்த தகவல் அறிந்த கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மொழுகாளின் உடலை கைப்பற்றி கோபி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் கருப்புசாமியை கைது செய்தனர்.