Categories
தேசிய செய்திகள்

தலைக்கேறிய போதை…. “ஆர்மி வாகனத்தை எட்டி உதைத்து… தகராறு செய்த மாடல் அழகி”… வைரலாகும் வீடியோ….!!!

டெல்லியை சேர்ந்த மாடல் அழகி மதுபோதையில் ராணுவ வாகனத்தை வழிமறித்து தகராறு செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம், குவாலியரில் டெல்லியை சேர்ந்த 22 வயதான மாடல் அழகி ஒருவர் தனது நண்பர்களுடன் சுற்றுலாவுக்கு வந்துள்ளார். இவர் குடிபோதையில் குவாலியர் சாலையில் வரும் வாகனத்தை வழிமறித்து தகராறு செய்து வந்துள்ளார். அந்த வழியாக வந்த ராணுவ வாகனத்தை வழிமறித்து ராணுவ வாகனத்தின் பம்பரில் தனது காலால் பலமுறை எட்டி உதைத்து தகராறு செய்துள்ளார். வாகனத்திலிருந்து இறங்கி வந்த ராணுவ வீரர்கள் சாலையை விட்டு நகரும் படி அவரிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மது போதையில் இருந்த அந்த பெண் ராணுவ வீரரிடம் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாகனத்தை செல்லவிடாமல் நின்று கொண்டிருந்தார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த காவல்துறையினர் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். மது போதையில் இருந்த அந்த பெண்ணின் மீது பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவம் தொடர்பாக ராணுவ வீரர்கள் யாரும் புகார் தெரிவிக்கவில்லை. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |