கரூர் மாவட்டத்தில் அரசு பள்ளி மாணவிகள் மூன்று பேர் ஒயின் அருந்திவிட்டு போதையில் மயங்கி கிடந்த விவகாரம் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக முழுவதும் இன்று போதைப்பொருள் தடுப்பு நிகழ்ச்சி மற்றும் விழிப்புணர்வு நடைபெற்று வருகின்றது. ஆனால் கரூர் மாவட்டத்தில் இப்படி ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. கரூர் மாவட்டம் மாநகராட்சி பள்ளியில் பிளஸ்-1 படித்த மூன்று மாணவிகள் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பொதுத் தேர்வில் தோல்வியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் மறு தேர்வு எழுதுவதற்காக நேற்று பள்ளிக்கு சென்றனர். தேர்வு முடிந்த பிறகு மூன்று மாணவர்களில் ஒருவர் தனது ஆண் நண்பரிடம் ஒயின் வாங்கி தர சொல்லி கேட்டுள்ளனர் .
அதில் ஒரு மாணவி ஒயின் அருந்திவிட்டு வீட்டிற்கு சென்றதாகவும், மற்ற இரண்டு மாணவிகள் ஒயின் அருந்திவிட்டு பேருந்து நிலையத்தில் வாந்தி எடுத்து மயங்கி கிடந்ததாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்தபோது அவர்களை மீட்டு மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்து பின்னர் அவர்களின் பெற்றோருக்கு தகவல் கொடுத்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.