சின்னமனூர் அருகே அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த வாலிபருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து தேனி கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
தேனி மாவட்டம், சின்னமனூரில் உள்ள புலிக்குத்தி பகுதியில் வசித்து வருபவர் செல்வராஜ். 27 வயதான இவர், 27.3.2016 அன்று பல்லவராயன் பட்டியில் குடி போதையில் நின்று கொண்டிருந்துள்ளார். அந்த நேரத்தில் சின்னமனூர் வழியாக போடி நோக்கி சென்ற அரசு பேருந்தை செல்வராஜ் வழிமறித்து, பஸ்சை எடுக்கவிடாமல் தகராறு செய்தார். மேலும் பஸ் மீது கல்வீசி தாக்கி உள்ளார். இதில் பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்து விட்ட நிலையில் அவரை மடக்கிப் பிடித்து அதே பேருந்தில் ஏற்றி சின்னமனூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.
இதில் காவல்துறை வழக்குப்பதிந்து செல்வராஜை கைது சிறையில் அடைந்தது. இந்த வழக்கு தேனி மாவட்ட செசன்சு கோர்ட்டில் நடந்த நிலையில் அரசு தரப்பில் வக்கீல் டி.கே.ஆர்.கணேசன் ஆஜராகி வாதாடி வந்தார். இறுதி விசாரணையில் நேற்று முன் தினம் தீர்ப்பளித்த நீதிபதி விஜயா செல்வராஜூக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டு, மேலும் அபராதம் செலுத்த தவறினால் 6 மாதம் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்றும் கூறி உள்ளார்.