கர்நாடக மாநிலதைச் சேர்ந்த கட்டடப் பணியாளர், தங்கி வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் அவர் திடீரென்று கிம்ஸ் மருத்துமனையில் விநோதமான காயத்துடன் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது மலக்குடலின் உள்ளே கழிப்பறை நீர் ஜெட் ஸ்பிரே சிக்கி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்து ஜெட் ஸ்பிரேயை மலக்குடலில் இருந்து மருத்துவர்கள் நீக்கியுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சக பணியாளரிடம் விசாரித்த போது, அவர் குடிபோதையில் மலக்குடலுக்குள் அதைச் சொருகியதாக கூறியுள்ளார். இந்தச் சம்பவம் விசித்திரமாக இருப்பதால் மருத்துமனை நிர்வாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.