Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

தலைக்கேறிய போதை… ஆள்மாறி கொலை செய்த ஆசாமிகள்… கைது செய்த போலீசார்..!!

போதையில் ஆள் தெரியாமல் குத்தி கொலை செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் துறைமுகம் பகுதியை சேர்ந்த முருகானந்தம் சண்முகவேல் ஆகியோருக்கும் அதே பகுதியை சேர்ந்த வேலுசாமி என்பவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் வேலுச்சாமியை கொலை செய்ய திட்டமிட்டனர். சம்பவத்தன்று வேலுசாமியை கொலை செய்ய வேண்டும் என்பதற்காக முருகானந்தமும் சண்முகவேலு மது அருந்தியுள்ளனர். அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு வேலுசாமி குத்திக் கொலை செய்வதற்காக காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த அவர் வேலுச்சாமியின் தோற்றத்தில் இருந்ததால் முருகானந்தமும், சண்முகவேலுவும், அவர் வேலுசாமிதான் என்று நினைத்து குத்திக் கொலை செய்துவிட்டனர். கொலை செய்த பிறகு உடலை தூக்கி அப்புறப்படுத்தலாம் என்று நினைத்து தூக்கியபோது அவர்களுக்கு அது வேலுசாமி இல்லை என்று தெரிய வந்தது. உடனே ஏரிய போதை எல்லாம் இறங்கிவிட்டது. என்ன செய்வது என்று தெரியாமல் கோவை சென்று நண்பன் தர்மா வீட்டில் தங்கி விட்டனர்.

கொலை செய்யப்பட்டவர் அதே பகுதியை சேர்ந்த மனோஜ் என்பதும், கொலை செய்தவர்களையும் கண்டறிய ராமேஸ்வரம் போலீசார் தேடி வருகின்றனர் என்பதும் தெரியவந்தது. இதை அறிந்த சண்முகவேல், முருகானந்தம், தர்மா ஆகியோர் கோவை சாய்பாபா காலனியில் உள்ள போலீசில் சரண் அடைந்துள்ளனர். இதையடுத்து கோவை போலீசார் ராமேஸ்வரத்தில் உள்ள போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

Categories

Tech |