Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“தலைக்கேறிய போதை”…. பெற்ற மகளிடம் அத்துமீறிய கொடூர தந்தை…. பரபரப்பு சம்பவம்…!!!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி தாலுகாவிற்கு உட்பட்ட கிராமத்தில் 42 வயதுடைய கூலி தொழிலாளி வசித்து வருகிறார். மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான தொழிலாளி தனது குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் குடிபோதையில் தொழிலாளி தனது 16 வயதுடைய மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனை யாரிடம் சொல்வது என தெரியாமல் சிறுமி மன உளைச்சலில் இருந்துள்ளார்.

சம்பவம் நடைபெற்ற அன்று குடிபோதையில் வீட்டிற்கு வந்த தொழிலாளி தனது மகளிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால் சிறுமி தனது தாயிடம் நடந்துவற்றை தெரிவித்து கதறி அழுதார். இதுகுறித்து சிறுமியின் தாய் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிந்த போலீசார் கூலி தொழிலாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |