Categories
தேசிய செய்திகள்

தலைநகரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா… அமலாகுமா முழு ஊரடங்கு?…. அதிகாரிகளின் ஆலோசனை…..!!!!!

உலகம் முழுவதும் சென்ற 2 வருடங்களாக கொரோனா தாக்கம் அதிகமாக இருந்தது. அப்போது கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு பல்வேறு லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். அந்த வகையில் முழு ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு என விதிக்கப்பட்டு மக்களை பொதுயிடங்களில் நடமாடவிடாமல் எச்சரிக்கை விடுத்தனர். அத்துடன் பொதுயிடங்களுக்கு செல்லும்போது கட்டாயம் முகக்கவசம் அணிந்து செல்ல வேண்டும் எனவும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் மக்கள் கண்டிப்பாக 2 தவணை தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டது.

இந்த கொரோனா நெறிமுறைகளை மக்கள் ஓரளவுக்கு கடைபிடித்ததால் இந்தியாவில் மெல்லமெல்ல தொற்று பாதிப்பு குறைய தொடங்கியது. ஆனால் தற்போது மீண்டும் இந்தியாவில் சில இடங்களில் கொரோனா பரவ ஆரம்பித்திருக்கிறது. இந்த நிலையில் நாட்டின் தலைநகர் டெல்லியில் கொரோனா கடந்த சில தினங்களாக தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கிறது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் சுமார் 325 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 40 நாட்களுக்கு பின் தற்போதுதான் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருவதாக சுகாதார துறை அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கடந்த வாரத்தில் மட்டுமே கொரோனா பாசிட்டிவ் விகிதம் 0.5 சதவீதத்திலிருந்து 2.39 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமோ என்று மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். வருகிற ஏப்ரல் 20ஆம் தேதி கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் ஆலோசனை நடத்தவுள்ளனர்.

Categories

Tech |