Categories
சென்னை மாநில செய்திகள்

தலைநகரில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. பீதியில் சென்னை மக்கள்…. அமைச்சர் சொன்ன அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்ததால் கடந்த பிப்ரவரி மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் திறக்கப்பட்டு முழு வீச்சில் இயங்கின. அதன் பிறகு அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அடுத்த கல்வி ஆண்டு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள பிரபல தனியார் கல்லூரியில் 5 மாணவர்களுக்கு கடந்த 21 ஆம் தேதி கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதே கல்லூரியில் நேற்று மேலும் 25 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பு மாணவர்கள் மட்டுமல்லாமல் பெற்றோர்கள், ஒட்டுமொத்த சென்னைவாசிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தலைநகரில் மீண்டும் கொரோனா பாதிப்பு தலைதூக்கி விடுமோ என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதனால் அடுத்த அறிவிப்பு வரும் வரை மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்படும் என கல்லூரி நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டாலும் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சமீபகாலமாக மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |