Categories
தேசிய செய்திகள்

தலைநகர் சண்டிகரை மாற்ற முடியாது….. முதல்-மந்திரி லால் கட்டார் அறிவிப்பு….!!!!

தலைநகரை மாற்ற முடியாது என்று சட்டமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் அரியானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது. அப்போது இரு மாநிலத்திற்கும் பொதுவாக சண்டிகர் தலைநகரமாக இருந்தது. இதை அரியானா 40 சதவீதமும், பஞ்சாப் 60 சதவீதமும் நிர்வகித்து வருகிறது. இந்நிலையில் சண்டிகரில் வேலை பார்க்கும் மத்திய அரசு ஊழியர்கள் அனைவரையும், மத்திய சேவை விதிகளின் கீழ் கொண்டு வரவேண்டும் என அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை உள்துறை மந்திரி அமித்ஷா வெளியிட்டார். இதற்கு பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் மான் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அதாவது மத்திய சேவை விதிகளால் சண்டிகர் மத்திய அரசின் கட்டுப்பாட்டிற்கு சென்று விடும் அபாயம் உள்ளது என கூறினார். இந்நிலையில் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தின் போது சண்டிகர் பஞ்சாப் மாநிலத்திற்கு முழுமையாக மாற்றவிட வேண்டும் என பஞ்சாப் முதல்-மந்திரி பகவந்த் சிங் கூறினார். இதற்கு பா.ஜ.கவை தவிர அனைத்து கட்சிகளும் உடன்பட்டது. இதற்கு அரியானா முதல் மந்திரி மனோகர் லால் கட்டார் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதாவது அரியானா மாநிலத்திற்கு சண்டிகர் மட்டுமே தலைநகராக இருக்கும். இதை மாற்ற முடியாது என சட்டமன்ற கூட்டத்தில் கூறியுள்ளார்.

Categories

Tech |