கொரோனா பரவலின் காரணமாக டெல்லிக்கும், மதுரைக்கும் இடையேயான விமான போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து டெல்லிக்கு செல்லும் விமானப் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில்
மத்திய அரசும், மாநில அரசும் நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் விமான போக்குவரத்து சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
பிற்பகல்,மாலை என இரண்டு நேரங்களிலும் மதுரையில் டெல்லிக்கு செல்லும் விமான போக்குவரத்து சேவை நிறுத்தி வைக்கப்பட்டத்தைப் போல பெங்களூரு, ஹைதராபாத்திற்கு காலை மற்றும் மாலை மதுரையிலிருந்து சென்று கொண்டிருந்த விமான சேவைகள் இனி இரவு நேரம் மட்டும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.