காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி மீது பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கொடுத்த வழக்கு தற்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் நெருக்கடியை கொடுத்துக் கொண்டிருக்கின்றது. காங்கிரஸ் கட்சி நாட்டை ஆண்டபோது நேஷனல் ஹெரால்ட் நாளிதழை வெளியிட்ட அசோசியேட் ஜர்னல்ஸ் லிமிடெட் நிறுவன சொத்துக்களை காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பங்குதாரர்களாக உள்ள எங் இந்தியன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு மாற்றப்பட்டதின் பண மோசடி நடைபெற்றது என சுப்பிரமணியசாமி தொடர்ந்து வழக்கு தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.
இது தொடர்பாக அமலாக்கத்துறை சோனியா காந்திக்கு சம்மன் அனுப்பி விசாரித்து வருகிறது. இன்றும் விசாரணைக்கு சம்பந்தம் அனுப்பி உள்ளது. சோனியா காந்தி விசாரணைக்கு ஆஜராக உள்ளார். இந்த விசாரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் மத்திய அரசு பழிவாங்கும் உணர்வோடு செயல்படுவதாகவும் கூறி காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமலாக்கத்துறையின் இந்த நடவடிக்கைக்கு எதிராக டெல்லியில் சத்தியாகிரக போராட்டம் நடைபெறுவதாக கட்சி அறிவித்துள்ளது.