Categories
மாநில செய்திகள்

‘தலைநிமிர்ந்து வருகிறேன்’…. முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்….!!!!

மறைந்த முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் இன்று. அரசியல் வாழ்க்கையில் மாபெரும் உயரங்கள், மிக மோசமான பள்ளங்கள் என இரண்டையும் மாறி மாறிப் பார்த்து அரசியல் ஆளுமைகளில் இவரைப்போல் எவரும் இல்லை. எழுத்தாளர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகங்கள் கொண்டவர். திரைத் துறையிலும் சிறந்து விளங்கியவர். தமிழகம் மட்டுமன்றி தமிழகத்துக்கும் முன்னுதாரணமாகத் திகழ்ந்தவர்.

இந்நிலையில் கருணாநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் கொரோனா இல்லாத தமிழ் நாட்டை உருவாக்க தொடர்ந்து போராடி வருவதாகவும், வாக்களிக்கத் தவறியவர்கள் பாராட்டையும் பெறும் வகையில் செயல்படுவதாகவும் தங்களிடம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன் என்று சொல்ல தலைநிமிர்ந்து வருவதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |