ஈரநிலம் படத்தில் அறிமுகமாகி 60 திற்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருப்பவர் போஸ் வெங்கட். இவர் கடந்த 2020 ஆம் வருடம் வெளியான கன்னி மாடன் படத்தின் மூலமாக இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த படம் சாதி மற்றும் ஆவண கொலைகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து போஸ் வெங்கட் தற்போது மா பொ சி எனும் புதிய திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இந்த படத்தில் கதாநாயகனாக விமல் நடித்துள்ளார். இதில் கன்னி மாடம் படத்தில் கதாநாயகியாக சாயாதேவி நடிகின்றார். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் சரவணன் மற்றும் நடிகை ராமா நடிக்க இருக்கின்றார்கள்.
தயாரிப்பாளர் சிராஜ் இந்த படத்தை தயாரிக்க இனியன் ஒளிப்பதிவையும் இசையை சித்து குமாரும் கவனித்து வருகின்றனர். இந்த படம் பற்றி இயக்குனர் போஸ் வெங்கட் பேசும்போது, மாபொசி என்றதும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவன் ஞானம் பெயர் தான் நினைவுக்கு வரும். ஆனால் தலைப்பு அது அல்ல மா என்ற துணை எழுத்தில் துணைக்கால் சேர்த்து தலைப்பு போட்டதிலிருந்தே சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கின்றது. அதை தெளிவுபடுத்த இதுவே சரியான தருணம் என நினைக்கின்றேன் மாங்கொள்ளை பொன்னரசன் சிவஞானம் என வைத்திருந்தோம். அது பெரிய தலைப்பாக இருக்கிறது என சுருக்கி மாபொசி என வைத்து இருக்கின்றோம். ஒருவேளை மாபொசி அவர்களை நினைவு படுத்தினால் தமிழுக்கு செய்யக்கூடிய நல்ல விஷயமாகத்தான் இருக்கும் நிச்சயமாக அவர் பெயரை பன்மடங்கு பெருமைப்படுத்தும் விதமாக தான் இந்த படம் இருக்குமே தவிர கலங்கப்படுத்தும் விதமாக இருக்காது. அரசியல் காழ் புணர்ச்சி எனக்கு கிடையாது கல்வியை மையப்படுத்தி எடுக்கப்படும் படம். மேலும் இந்த படத்தில் மாபொசி ஐயா அவர்களை போற்றக்கூடிய படமாக தான் இருக்கும் என தெரிவித்துள்ளார்.