தலைமன்னார் – தனுஷ்கோடி பகுதியில் முதல் மூறை சியாமளா என்ற பெண் நீந்தி சாதனை படைக்க உள்ள செயல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த சியாமளா ஹோலி வயது 48 . இவர் ஒரு நீச்சல் வீராங்கனை . மேலும் இவர் தனது நீச்சல் பயிற்சியை, பயிற்சியாளர் காவல்துறை உயர் அதிகாரியான ராஜூவ்திரிவேதிகான் என்பவரிடம் முறையாக கற்றுக்கொண்டார். மேலும் அவர் ஒன்றரை கிலோமீட்டர் தூரம் கிருஷ்னா நதியில் , 13 கிலோமீட்டர் கங்கை நதியில் நிந்தியுள்ளதாக கூறியுள்ளார். மேலும் 2019 ல் 10 கிலோ மீட்டர் மற்றும் 5 கிலோ மீட்டர் நீச்சல் போட்டியில் போர்பந்தரில் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்.
கடலில் நீந்துவது அவரது லட்சியமாக இருந்த நிலையில், தற்போது இலங்கை தலைமன்னார் மற்றும் தனுஷ்கோடி இடையில் உள்ள கடல் பகுதியில் நீந்தி கடப்பதற்காக ராமேஸ்வரம் வந்துள்ளார். இவர் வியாழக்கிழமை அன்று காலை 10 மணிக்கு இராமேஸ்வரத்திலிருந்து இலங்கை தலைமன்னாருக்கு ஒரு விசைப்படகில் வர உள்ளார். மேலும் இரவு முழுவதும் படகில் தங்கியிருந்து வெள்ளிக்கிழமை அன்று காலை நான்கு மணி அளவில் இலங்கை தலைமன்னார் கடல் பகுதியில் இருந்து தனது நீச்சல் பயணத்தை தொடங்கி , மாலை 4 மணிக்கு தனுஷ் கோடி கரையை வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும் இப்பகுதியில் நீந்துவதற்கு முறையாக இந்திய இலங்கை அரசிடம் அனுமதி பெற்றுள்ளேன் என்று கூறியுள்ளார். இதுவரை தலைமன்னார் -தனுஷ்கோடி இடையே பலர் நீந்தி வந்து சாதனை புரிந்தாலும் ஒரு பெண் இந்த சாதனைக்கு முயற்சி செய்வது இது தான் முதல் முறை என்று பெருமையுடன் சியாமளா கூறினார்.