Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

தலைமறைவாக இருந்த நபர்…. சினிமா பாணியில் விரட்டிப பிடித்த போலீஸ்…. அதிரடி நடவடிக்கை….!!

சினிமா பாணியில் ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய வீட்டு வசதி வாரியத்தில் சத்தியமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் ரேஷன் அரிசியை வாங்கி கர்நாடகா மற்றும் ஆந்திர மாநிலங்களுக்கு கடத்தி வந்துள்ளார். ரேஷன் அரிசி கடத்திய வழக்கில் கடந்த ஆகஸ்ட் மாதம் 3 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்து தலைமறைவாக இருந்த சத்தியமூர்த்தி மற்றும் சிலரை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் கிருஷ்ணமூர்த்தி வீட்டில் இருப்பதாக கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் அங்கு சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் கிருஷ்ணமூர்த்தி வீட்டின் சுற்றுச்சுவரை ஏறி குதித்து வெளியே ஓடினார். அப்போது சினிமா பாணியில் போலீசார் சத்தியமூர்த்தி விரட்டி சென்று பிடித்து விட்டனர். இதனை அடுத்து கைது செய்யப்பட்ட சத்தியமூர்த்தி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கிருஷ்ணகிரி கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

Categories

Tech |