6 ஆண்டுகளுக்கு பிறகு முக்கிய குற்றவாளியை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூங்குடி மூலை வரசித்தி விநாயகர் கோவிலுக்கு சொந்தமான 1 1/2 அடி உயரமுடைய ஐம்பொன் விநாயகர் சிலையை மர்ம நபர்கள் கடந்த 2016-ஆம் ஆண்டு திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் 7 பேரை கைது செய்துள்ளனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தங்கவேல் என்பவர் தலைமறைவாக இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சாமி சிலை திருட்டு வழக்குகளில் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்யுமாறு சிலை திருட்டு தடுப்புப் பிரிவு டி.ஜி.பி ஜெயந்த்முரளி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அந்த உத்தரவின்படி தனிப்படை காவல்துறையினர் கொல்லுமாங்குடி பகுதியில் பதுங்கியிருந்த தங்கவேலை சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அதிரடியாக கைது செய்துள்ளனர்.