செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்கள் இரத்தத்தில் ஊறியது. திராவிட முன்னேற்ற கழகத்தை எதிர்க்க வேண்டும். அதற்காக எந்த தியாகத்தையும் செய்ய வேண்டும். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது தீய சக்தி, அந்த தீய சக்தியை எதிர்பதிலே நாம் சரணாகதி அடைந்து விட்டோம் என்று சொன்னால் தொண்டர்கள் நம்மை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சட்டமன்றத்தில் என்ன நிகழ்வு நடந்தது ?
மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய அண்ணன் முன்னாள் முதலமைச்சர் அவர்கள் சட்டசபையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவராக பொறுப்பை ஏற்றுக் கொண்டு, 66 சட்டமன்ற உறுப்பினர்களை வழிநடத்த வேண்டிய பொறுப்பில் இருக்கிற அவர் சொல்லுகிறார்.. இது யாருடைய மனதையும் துன்புறுத்துவதற்க்காகவும், வருத்தப்பட வைப்பதற்காகவும் நான் சொல்லவில்லை இதை நினைவூட்டுவதாக சொல்லுகிறேன்.
பராசக்தி வசனத்தை என் தந்தையார் அவர்கள் படிக்கச் சொன்னார்கள், நான் அதை என் தலைமாட்டில் வைத்து மனப்பாடம் செய்து ஒப்புவிப்பேன் என்று யார் மனதை குளிர்விப்பதற்காக, ஒட்டுமொத்த அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை அடமானம் வைப்பதற்காக அந்த சொல்லை சொல்லுகிறார் என்று சொன்னால் நான் இதை நினைவுக்கு கொண்டு வருவதற்கு கடமைப்பட்டிருக்கிறேன். இதனால் யாரும் வருத்தப்பட வேண்டாம். ஏனென்றால் திமுக எதிர்ப்பதுதான் பிரதான கொள்கை என தெரிவித்தார்.