நெல்லிக்காய், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, மயிர் கால்களை வலிமையடையச் செய்கிறது. நெல்லிக்காய், முடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை தூண்டுகிறது. முடியின் வளர்ச்சியை அதிகரிக்க நெல்லிக்காயை எப்படி பயன்படுத்துவது என்று பார்ப்போம்.
நெல்லிக்காய் – 4
வெந்தயம் – 2 ஸ்பூன்
தயிர் – 1/4 ஸ்பூன்
செய்முறை:
முதலில் நெல்லிக்காயை சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். பின் அதனை வெயிலில் நன்கு காய வைக்கவும்.
மேலும் 2 ஸ்பூன் வெந்தயத்தை, 1/4 ஸ்பூன் தயிரில் 3 மணி நேரம் ஊற வைக்கவும். இறுதியில் இவை அனைத்தையும் ஒன்றாகக் கலந்து பயன்படுத்தி வந்தால், தலைமுடி உதிர்வு கட்டுக்குள் வருவதோடு, முடி அடர்த்தியாக வளரும்.