நெல்லிக்காய் மற்றும் சீகக்காய் தவிர தலை முடி பிரச்சனைக்கு ஒரு தீர்வு என்பது கிடையவே கிடையாது.
நெல்லிக்காய், பூந்திக்கொட்டை, சீகைக்காய் ஆகியவற்றை இரண்டு லிட்டர் தண்ணீரில் போட்டு அது பாதியாகும் வரை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அந்த நீரை தேங்காய் எண்ணெய் அல்லது கற்றாழை சாறு சேர்த்து கலந்து மூடியின் கால் பகுதியில் படும்படி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற வைத்து பின்னர் அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு இரண்டு முறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
நெல்லிக்காயை துண்டுகளாக்கி தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கி கொள்ளுங்கள். பின் எண்ணெய் குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி அவற்றை வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை தினமும் தலைக்கு தடவி வர நல்ல பலன் கிடைக்கும். இதை வைத்து நன்கு மசாஜ் செய்த பிறகு தலை குளித்தால் தலைமுடி நன்கு வளர்ச்சி அடையும். ஆண் பெண் என இருவரும் இந்த எண்ணெய்யை பயன்படுத்தலாம்.