Categories
உலக செய்திகள்

தலைமுடி கொட்டுகிறதா…?? இதோ உங்களுக்கான சூப்பர் தீர்வு…!! இவர் கூறுவதை கேளுங்கள்…!!!

முடி அழகு முக்கால் அழகு என்பார்கள் அதுபோல முடி என்பது ஆண் பெண் இருவருக்கும் அழகு சேர்க்கும் ஒன்றாகும். ஆனால் சிலருக்கு முடி கொட்டும் பிரச்சனைகள் இருக்கக்கூடும். இதனால் அவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாவார்கள். முடி கொட்டுவதற்கு போதிய அளவு ஊட்டச்சத்து இன்மை, மன அழுத்தம் உள்ளிட்டவற்றை காரணமாக கூறலாம். அதிக அழுத்தம் கொடுத்து சீவும் போது கூட உங்களின் முடி கொட்டலாம். அதோடு நம்மில் பலர் வாசனைக்காகவும் பிசுபிசுப்பு தன்மையைப் போக்கவும் பல்வேறு விதமான ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்களை பயன்படுத்துகிறோம். இது முடி கொட்டுவதற்கு ஒரு காரணமாக அமையலாம்.

இவ்வாறு முடி கொட்டும் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கு நிக் கோயெட்ஜீ என்ற நபர் அவருக்கு தெரிந்த தீர்வு ஒன்றை டிக்-டாக்கில் வெளியிட்டு உள்ளார். அவர்தான் கல்லூரியில் படிக்கும் காலத்தில் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருந்ததாகவும், இதனால் கடுமையாக அவதியுற்று வந்ததாகவும் கூறியுள்ளார். எனவே முடி கொட்டுவதை தடுக்க புதிய ஷாம்புகள் மற்றும் கண்டிஷனர்கள் என பலவற்றைப் பயன்படுத்தி வந்துள்ளார். ஆனாலும் அவருடைய தலை முடி பிரச்சனைக்கு எந்த தீர்வும் கிடைக்கவில்லை. இதனை தொடர்ந்து அவர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார்.

அதாவது ஷாம்பு கண்டிஷனர் என எதையும் பயன்படுத்தாமல் 6 ஆண்டுகளுக்கு தலைக்கு குளிக்காமல் இருந்துள்ளார். இதுபற்றி நிக் கூறும்போது, ஆச்சரியப்படும் வகையில் என்னுடைய முடி பலம் அடைந்து உள்ளது. நன்றாக தலை முழுவதும் முடி அடர்ந்து வளர்ந்து காணப்படுகிறது என கூறியுள்ளார்.
இதற்கு பெயர் no poo movement என்றும் இதற்காக #nopoomovement என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |