செங்கல்பட்டு மாவட்ட திருப்பூர் வட்டம் கேளம்பாக்கம் பகுதியில் உள்ள அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்தனர். இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு சிசிடிவி அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் விழாவிற்கு வந்த 8 பேரிடர் தங்க செயின் பறிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுக்கு தெரியாமலே செயின் பறிப்பு நடந்திருந்தால் சில மணி நேரத்துக்கு பின்னால்தான் அவர்கள் கழுத்தில் இருந்த செயின் மாயமாய் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். அதனை தொடர்ந்து 8 பேரும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய போலீசார் சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது பட்டுப்புடவை அணிந்த பெண் ஒருவர் திருவிழா கூட்டத்தில் இருந்த பெண்களை பின்னால் நெருக்கமாக இடித்துக் கொண்டு வித்தியாசமான நடவடிக்கைகளில் காணப்பட்டார்.
அதன் பிறகு அவர் தான் செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை செய்தனர். அந்த விசாரணையில் பல அதிர்ச்சி உண்மைகள் வெளியாகி உள்ளது. அதாவது, கைதான பெண் பெயர் பாண்டீஸ்வரி. இவர் உறவினர்கள் 30 பேரும் சேர்ந்து தலைமறை தலைமுறைகாக திருடி வருவதாகவும் திருவிழா போன்ற கூட்டத்தில் இவர்கள் கைவரிசை காட்டுவது வழக்கம். இவரை பார்க்க குடும்ப பெண்ணை போல பணக்கார தோற்றம் இருக்க பட்டுப்புடவை, நகைகள் அணிந்து கொண்டுதான் ஒவ்வொரு திருட்டிலும் ஈடுபடுவார்கள். இதனால் போலீசாருக்கு இவர்கள் மீது சந்தேகமே வராது. எனவே கூட்டத்துக்குள் புகுந்து பெண்கள் பின்னாலே சென்று அவர்கள் அணிந்திருக்கும் செயினை லாவகமாக அறுத்து எடுத்து வந்து விடுவார்கள் என்று பாண்டீஸ்வரி வாக்குமூலம் அளித்தார். இதனை கேட்டு அதிர்ச்சியான போலீசார் அவரிடம் இருந்து 47 பவுன் நகைகளை பறிமுதல் செய்து அவரை சிறையில் அடைத்தனர். மேலும் பாண்டீஸ்வரியின் உறவினர்கள் யார் யார் ?இதுவரை எத்தனை நகைகளை அவர்கள் திருடியுள்ளனர்? அவர்களையும் பிடித்து நகைகளை பறிமுதல் செய்ய தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.