Categories
அரசியல்

தலைமைச் செயலகத்தில் சந்திப்பு…. இது எந்த வகையில் நியாயம்….? அதிர்ச்சியில் திமுக நிர்வாகிகள்…..!!!!!!!!

தமிழக உயர் கல்வித் துறை அமைச்சராக இருந்து வரும் பொன்முடி விழுப்புரம் மாவட்டத்தை திமுக கோட்டையாக மாற்றியதில் இவருக்கு பெரும் பங்கு இருக்கிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. இதன் காரணமாகவே மறைந்த முன்னாள் முதல்வர் மு கருணாநிதி தொடங்கி இன்றைய முதல்வர் மு க ஸ்டாலின் வரையிலும் பொன்முடிக்கு பெரிய அளவிலான செல்வாக்கை கொண்டவர் என்பதே திமுக தொண்டர்கள் நன்கு அறிவார்கள். இதன் காரணமாகவே தமிழகத்தில் ஒவ்வொரு முறையும் திமுக ஆட்சிக்கு வரும்போது பொன்முடி அமைச்சராகி அழகு பார்க்கிறது எனவும் கூறி திமுகவினரை பெருமை பேசுவதும் உண்டு.

இந்த சூழலில் சென்னை தலைமை செயலகத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியை சந்தித்து பேசுவதற்காக விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சில திமுக நிர்வாகிகள் சமீபத்தில் வந்திருக்கின்றனர். அப்போது அவர்களிடம் ஊரில் கட்சி வேலை பார்க்காமல் தலைமை செயலகத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்கிறீர்களா என அமைச்சர் பொன்முடி கேட்டிருக்கிறார். இதனால் மணமுடைந்த திமுக நிர்வாகிகள் ஆட்சி அதிகாரத்தை வைத்து காசு, பணம் பார்ப்பதற்கு தலைமை செயலகம் வரவில்லை உள்ளூர் மக்களின் கோரிக்கைகளின் நிறைவேற்றி தருவதற்காக தலைமை செயலகத்திற்கு வந்திருக்கின்றோம் என அவர்களும் பதிலுக்கு டென்ஷனாக பேசியுள்ளனர்.

உடனே சுதாரித்துக் கொண்ட அமைச்சர் பொன்முடி அங்கிருந்து திமுக நிர்வாகிகளை சமாதானப்படுத்தும் விதமாக சில வார்த்தைகளை கூறி அவர்களிடம் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து அவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்திருக்கின்றார். ஒரு வழியாக திமுக நிர்வாகிகள் வீட்டுக்கு வந்துவிட்டாலும் வெற்றி பெற செய்து அமைச்சராக்கி அழகு பார்க்கும் திமுக நிர்வாகிகளை ஒரு அமைச்சர் பேசிய விதத்தினை பார்த்து அதிர்ச்சி அடைந்து கிடக்கின்றனர். இது பற்றி திமுக நிர்வாகிகள் சிலர் பேசிய போது அமைச்சர் பொன்முடியை சந்தித்து தொகுதி மக்களின் பிரச்சினைகளை கோரிக்கையாக அளிக்க அங்கு சென்றோம். ஆனால் அமைச்சரின் பண்பாடற்ற செயல் எங்களை வெகுவாக பாதித்துள்ளது. மேலும் 10 ஆண்டு காலத்திற்குப் பின் திமுக ஆட்சிக்கு வந்திருக்கிறது. இந்த சூழலில் விசுவாசம் மிக்க நிர்வாகிகளிடம் எறிந்து  விழுவது எந்த வகையில் நியாயம் என தான் தெரியவில்லை என திமுக நிர்வாகிகள் கூறி வருத்தப்பட்டுள்ளனர்.

Categories

Tech |