தலைமைச் செயலாளரின் திடீர் வருகையால் அரசு அலுவலகமே ஆடிப்போனது.
சென்னைக்கு அருகே கும்மிடிப்பூண்டியில் ஆத்துப்பாக்கம் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக அமிர்தம் என்பவர் இருக்கிறார். இவர் கடந்த ஆண்டு சுதந்திர தின விழாவில் தேசியக்கொடியை ஏற்று வந்தபோது ஜாதியை காரணம் காட்டி தேசிய கொடியை ஏற்ற விடாமல் தடுத்துள்ளனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஊராட்சி செயலாளர் சசிகுமார் என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்தியாவில் இன்று 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட இருப்பதால் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை தொடங்கி வைத்து அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்குமாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் தலைமைச் செயலாளர் இறையன்பு அதிரடியாக ஆத்துப்பாக்கம் ஊராட்சிக்கு திடீரென சென்றார். இவர் அங்கிருந்து அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி சில உத்தரவுகளை பிறப்பித்தார். இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற தலைவி அமிர்தம் தேசிய கொடியை ஏற்றினார். மேலும் சுதந்திர தின விழாவை முன்னிட்டு ஊராட்சி மன்ற அலுவலகங்களில் எவ்வித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு இறையன்பு அதிரடி உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளார்.