Categories
அரசியல்

தலைமையிடம் இருந்து தப்பிக்க…. வழி தேடும் மாஜி அமைச்சர்கள்…. அமைச்சர் குற்றசாட்டு…!!!

நடந்த முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுகவானது அமோக வெற்றி பெற்றுள்ளது. இதனை முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் இவ்வெற்றியானது அதிகாரத்தில் கிடைத்ததாகும் என குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கூடியிருந்த பொதுமக்கள் மற்றும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள கோட்டூரில் இருந்து குருசாமி கோவிலுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காகவும், பொதுமக்களின் வசதிக்காகவும் சிவகாசி மற்றும் சாத்தூர் இடையே பொதுப் பேருந்துகள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்து இருந்தனர்.

இதனால் பொதுமக்கள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக நேற்று சாத்தூர் சிவகாசி புதிய வழித்தடங்களில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் பேருந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, திமுக நடந்து முடிந்த இடைத் தேர்தலில் அமோக வெற்றியை பெற்றுள்ளது. இதற்கு காரணம் நல்லாட்சிக்கு பொதுமக்கள் கொடுத்த வெற்றியை பரிசாகும்.

மேலும் அதிமுகவானது இந்த நான்கு மாதத்தில் இருக்கும் இடம்  தெரியாத அளவிற்கு இத்தேர்தலில் தோல்வியைக் கண்டுள்ளது. அதிமுக கட்சிக்கு இனி எந்த எதிர்காலமும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த தேர்தலானது அமைந்துள்ளது. மேலும் இவற்றினை குறித்து அதிகாரத்தால் கிடைத்த வெற்றி என்று ஆர் பி உதயகுமார் குற்றம்சாட்டியுள்ளார். எந்த இடத்தில் வன்முறையோ, தவறோ நடந்தது என்று சுட்டிக் காட்டினால் அதனை நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். தேர்தலானது  நேர்மையாக நடந்து உள்ளது. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதுபோல் முன்னாள் அமைச்சர்கள் தப்பித்துக் கொள்ள வழி தேடுகிறார்கள்” என்று கூறினார்.

Categories

Tech |