தலைமை செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன்காரணமாக சுகாதாரத் துறையும் தமிழக அரசும் இணைந்து ஆலோசனை செய்து பல கட்டுப்பாடுகளை அறிவித்திருந்தது. இரவு நேர ஊரடங்கு, ஞாயிறுகிழமைகளில் முழு ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டது. இதை தொடர்ந்து நேற்று புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதி கோரிய வழக்கு தொடர்பாக அலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காலை 9;15 மணிக்கு அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார்.