பிரதமர் முதலமைச்சருக்கு மாற்றுத்திறனாளி பெண் மனு ஒன்று அனுப்பியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியில் வசித்து வருபவர் கூடைப்பந்து வீரர் ரமேஷ்பாபு. இவருடைய மனைவி மூளை முடக்குவாதம் மாற்றுத்திறனாளியான ஷர்மிளா. இந்நிலையில் நேற்று முன்தினம் ரமேஷ்பாபு திண்டுக்கல் தலைமை தபால் நிலையத்திற்கு தனது மனைவியை கைகளில் தூக்கிக்கொண்டு வந்துள்ளார். அதன்பின் ஷர்மிளா சார்பாக மனு ஒன்றை பிரதமர், தமிழக முதலமைச்சர், டி.ஜி.பி ஐகோர்ட்டு, பா. ஜனதா மாநில தலைவர் ஆகியோருக்கு அனுப்பினர்.
இதுகுறித்து ரமேஷ் பாபு கூறியதாவது, என்னுடைய மனைவிக்கு சொத்தில் பங்கு கிடையாது என்று தெரிவித்து எழுதிக் கொடுக்கும்படி அவருடைய குடும்பத்தினர் அவரை தாக்கி உள்ளார்கள். இதுதொடர்பாக காவல் நிலையம் கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய மகன் விஷ்ணுராம் மாற்றுத்திறனாளி கூடைப்பந்து அணி தலைவனாக இருக்கிறான்.
அவருக்கு இந்திய விளையாட்டு ஆணையம் நிதி கொடுக்காததால் அவர் வெளிநாட்டிற்கு சென்று விளையாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. இதனால் எனது மகனும் பாதிக்கப்பட்டுள்ளான். இதுகுறித்து பிரதமர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும் இதற்காக வருகின்ற 10ஆம் தேதி சென்னை தலைமை செயலகம் முன் உண்ணாவிரதம் இருக்க போகின்றோம் என்று தெரிவித்தார்.