Categories
மாநில செய்திகள்

தலைமை தேர்தல் ஆணையத்தில் மனுத்தாக்கல்… EPS க்கு செக் வைத்த ஓ.பன்னீர்செல்வம்….!!!

அதிமுக ஒன்றிய தலைமை விவகாரம் தலை தூக்கிய நிலையில் கட்சியை இரண்டாக நிற்கிறது. இதனிடையில் பல்வேறு சர்ச்சைகளோடு அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் நேற்று நடந்து முடிந்தது. இந்நிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் வருகின்ற 11ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்கள் தவிர மற்ற எந்த தீர்மானத்தை நிறைவேற்ற கூடாது என்று சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை பிறப்பித்தனர். ஆனால் அதை மீறி மூத்த நிர்வாகிகள் மேடையில் கூச்சலிட்டனர். அப்போது ஒற்றை தலைமை விவகாரம் பற்றி பேசப்பட்டதை எதிர்த்து வெளிநடப்பு செய்த ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சந்தித்தனர். குடியரசுத் தலைவர் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பங்கேற்க அழைப்பு விடுத்ததாக அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில் திடீரென நேற்று இரவு டெல்லி புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் அதே காரணத்தை சொன்னார். ஆனால் அதன்பிறகு பல்வேறு முடிவுகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இன்று இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் ஒருங்கிணைப்பாளர் சம்மதமின்றி பொதுக்குழு கூட்ட முடியாது என்றும் ஜூலை 11-ஆம் தேதி நடைபெற இருக்கும் பொதுக்குழு தடை விதிக்க வேண்டும் என்றும் பொதுக்குழுவை கூட்டும் அதிகாரம் அவை தலைவருக்கும் இல்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் அதிமுகவின் அதிகாரமிக்க பதவியைக் கைப்பற்றலாம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டம் தீட்டி வரும் நிலையத்தில் தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு அவருக்கு ஓ.பன்னீர்செல்வம் செக் வைத்துள்ளார்.

Categories

Tech |