கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக உள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதியான ஏபி.சாஹி நேற்று கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்ற தலைமை நீதிபதி உடல்நிலை சீராக இருக்கிறது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.
அதுமட்டுமன்றி கொரோனா அறிகுறி தென்பட்டால் மருத்துவமனைக்கு வந்தால் மட்டுமே குணப்படுத்த முடியும். முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் கட்டாயம் அவசியம் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.