Categories
தேசிய செய்திகள்

“தலையணையுடன் உடலுறவு” மருத்துவக் கல்லுரியில் சீனியர் மாணவர்கள் ராகிங்…. வெளியான அதிர்ச்சி தகவல்…!!

முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு மாணவர்கள் ராகிங் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசம் மாநிலத்தில் மகாத்மா காந்தி மருத்துவக் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரி வளாகத்தில் மருத்துவ மாணவர்கள் படிக்கும் விடுதில் அமைந்துள்ளது. இந்த விடுதியில் வைத்து முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் ராகிங் செய்துள்ளனர். அதாவது முதலாம் ஆண்டு மாணவர்களிடம், இறுதியாண்டு மாணவர்கள்  தலையணையுடன் உடலுறவு செய்ய சொல்வது, தோப்பு காரணம் போட சொல்லுதல், மாணவிகளின் பெயரை தவறாக பயன்படுத்துதல் போன்ற பல்வேறு விதமான செயல்களில் ஈடுபட செய்துள்ளனர்.

இது தொடர்பாக பல்கலைக்கழக ராகிங் தடுப்பு குழுவின் செல்போன் நம்பருக்கு தொடர்பு கொண்டு மாணவர் ஒருவர் புகார் கொடுத்துள்ளார். இந்த புகாரை மானிய குழு கல்லூரி நிர்வாகத்திற்கு அனுப்பி வைத்துள்ளது. அதன் பிறகு பல்கலைக்கழகம் மேற்கொண்ட விசாரணையின் போது ராகிங் செய்யப்பட்டது உண்மை என தெரிய வந்தது. இதன் காரணமாக ராகிங் செய்த மாணவர்களின் பெயர்களை காவல்துறையினருக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு பல்கலைக்கழக சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |