Categories
அரசியல் மாநில செய்திகள்

தலையாட்டனும் இல்லனா… முதல்வர் பதவி போயிரும்… சுய நலம் சுருண்டு போச்சு …!!

மத்திய அரசுக்கு தலையாட்டனும், இல்லனா முதல்வர் பதவி போயிரும், சுயநலம் சுருண்டு போச்சு என ஸ்டாலின் அதிமுக அரசை விமர்சித்துள்ளார்.

திமுக நடத்திவரும் தேர்தல் பிரச்சார சிறப்பு பொது கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய திமுக தலைவர் முக.ஸ்டாலின்,  மத்திய அரசின் புதிய மின்சார சட்டமானது தமிழக விவசாயிகள் இதுவரை பெற்று வரும் இலவச மின்சாரத்தை பறிக்கப் போகிறது. விவசாய மக்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகம் வழங்கிய மாபெரும் கொடை தான் இலவச மின்சாரம். அந்த உரிமையை மத்திய அரசின் புதிய மின்சார சட்டம் அழித்துவிடும். அதை எடப்பாடி அரசை எதிர்த்து உள்ளதா? இல்லை இந்த வரிசையில் வந்த மிக மோசமான சட்டம் தான் 3 வேளாண் சட்டங்கள்.

எடப்பாடி அவர்கள் உண்மையான விவசாயியாக இருந்தால் இந்த மூன்று சட்டத்தையும் எதிர்த்து தனது முதலமைச்சர் பணியை ராஜினாமா செய்து இருப்பார். அவர் விவசாயி இல்லை  விவசாய சட்டங்களை ஆதரித்து வெட்கமில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறார். இவை அனைத்தையும் பாஜக தான் கூற வேண்டும். அவர்களுக்கு பதிலாக நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என பழனிசாமி கூறுகிறார். பாஜகவினரால் கூட சொல்ல முடியாததை அவர்களால் கூட ஆதரிக்க முடியாத சட்டத்தை இவர் எதற்காக விழுந்து விழுந்து ஆதரிக்கவேண்டும். அங்குதான் பழனிச்சாமியின் சுயநலம் சுருண்டு கிடக்கிறது.

பாஜகவை எதிர்த்து அவர்களுக்கு தலையாட்டாமல் போனால் தனது பதவி உருண்டு விடும் என பயப்படுகிறார் பழனிச்சாமி. அதனால் பாஜகவின் பாதத்தை தாங்கிக் கொண்டு இருக்கிறார். இன்று  மத்திய அரசு நடத்தும் எந்த தேர்வாக இருந்தாலும் அது வடமாநில மக்களுக்கு நன்மை ஏற்படுத்துவதாகவே உள்ளது. அஞ்சல் தேர்வு ரயில்வே தேர்வு அனைத்துமே இந்தி பேசும் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனால் தமிழ்நாட்டு இளைஞர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியுள்ளது.

இதைப்பற்றி எடப்பாடி அரசு கவலைப்படுவது இல்லை. மத்திய அரசு பணிகளாக இருந்தாலும் அதில் அந்தந்த மாநிலங்களுக்கு முழு உரிமை உண்டு. அதைப் பெறுவதற்கான உரிமை அந்த மாநிலத்தை சேர்ந்த மக்களுக்கும் உண்டு. இந்தத் தேர்வுகளை எதற்காக ஹிந்தியில் மட்டும் நடத்துகிறீர்கள் என்று எடப்பாடி அரசு கேட்டதா? அரசியலமைப்பு சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் சொல்லப்பட்டுள்ள தமிழ் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் இந்தத் தேர்வு நடத்த வேண்டும் என்று பழனிச்சாமி அரசு என்றாவது கோரிக்கை வைத்ததா? தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு தான் தமிழகத்தில் வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சொல்ல தைரியம் எடப்பாடி பழனிச்சாமிக்கு உள்ளதா?

யார் எப்படிப் போனால் நமக்கு என்ன என்று  ஒரு முதலமைச்சரால் எப்படி இருக்க முடியும் . சிறுபான்மை சமூகங்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுகின்ற குடியுரிமை சட்டத்தை ஆதரித்து கூச்சமே இல்லாமல் மசூதிக்கு செல்ல எடப்பாடி பழனிச்சாமிக்கு  இப்போது எப்படி முடிகிறது. குடியுரிமை திருத்தச் சட்டத்தை மாநிலங்களவையில் அதிமுக எதிர்த்து வாக்களித்திருந்தால் அந்த சட்டமே தோற்று போயிருக்கும். நாடு முழுவதும் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்திய அந்த சட்டத்தை குப்புற விழுந்து ஆதரித்த அந்த பழனிச்சாமியை சிறுபான்மையினர் மட்டுமில்லை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள் என முக.ஸ்டாலின் மாநில அரசை விமர்சித்தார்.

Categories

Tech |