Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தலையில்லாமல் கரையொதுங்கிய பெண் சடலம்…. பொதுமக்கள் அதிர்ச்சி…. போலீஸ் தீவிர விசாரணை….!!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தில் பெண் பிணம் ஒதுங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் வைராவிகுளத்திலிருக்கும் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் சிறிய அணைக்கட்டு அமைந்துள்ளது. இந்த அணையின் கரையோரத்தில் தலை துண்டிக்கப்பட்டு, கைகளை கட்டிய நிலையில் பெண் பிணம் கரை ஒதுங்கி கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்கள்.

அப்புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Categories

Tech |