Categories
அழகுக்குறிப்பு லைப் ஸ்டைல்

“தலையில் உள்ள பொடுகையும், அரிப்பையும் தடுக்க என்ன வழி”…? வாங்க தெரிஞ்சுக்கலாம்…!!

கோடைகாலத்தில் பொதுவாக நமது சருமம் வறட்சியாக இருக்கும். இதனால், தலையில் பொடுகு மற்றும் அரிப்பு உண்டாகும். இவற்றை சரி செய்வது எப்படி எனப் பார்க்கலாம்.

இந்த தொந்தரவிற்கு கற்றாலையை பயன்படுத்தலாம். விரல்களைக் கொண்டு சோற்றுக் கற்றாழை ஜெல்லை தலைச் சருமத்தில் தடவுங்கள். அதை 10 முதல் 15 நிமிடங்கள் விட்டு மென்மையான ஷாம்புவை கொண்டு அலசுங்கள். இவ்வாறு தினமும் செய்வதன் மூலம் தலை வறட்சி குணமாகும். ஆஸ்துமா, சைனஸ் பிரச்னை உள்ளவர்கள் இதை தவிர்ப்பது நல்லது. இது உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கும்.

இதற்கு மாற்றாக எலுமிச்சை சாறு பயன்படுத்தலாம். இரண்டு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றில், மூன்று டேபிள் ஸ்பூன் அளவிலான தயிரை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். பின் இதனை தலையில் தடவி 10 முதல் 15 நிமிடம் ஊற விடுங்கள். பின்னர் ஒரு மென்மையான ஷாம்புவைக் கொண்டு அலசுங்கள். இந்த கலவையை தலை அரிப்பு மற்றும் வறட்சி நீங்கும் வரை தினமும் செய்து வாருங்கள். நல்ல பலன் கிடைக்கும்.

Categories

Tech |