Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

தலையில் ஏறிய பேருந்து…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்…. திக் திக் சம்பவம்…..!!!!

தனது தலையில் பேருந்து ஏறியும் உயிர்தப்பிய நபரின் வீடியோ வைரலாகி வருகிறது. அரியலூர் ஒட்ட கோவிலூர் என்ற கிராமத்தை சேர்ந்த இளைஞர் சத்தியசீலன் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது செல்லியம்மன் கோவில் வளைவில் திரும்பிய போது எதிரே மினி பேருந்து ஒன்று வந்துள்ளது. அப்போது அவர் திடீரென பிரேக் பிடித்து பைக்கை நிறுத்த முயன்று உள்ளார். அப்போது இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து கீழே சாய்ந்துள்ளது.

இதனிடையே பேருந்து அருகில் வர தனது இருசக்கர வாகனத்துடன் சேர்ந்து பேருந்தின் பின் சக்கரத்தில் அவர் சிக்கியுள்ளார். அதில் பேருந்து சத்தியசீலன் தலையில் ஏறியது. ஆனால் அவர் மிக தரமான தலைக்கவசம் அணிந்திருந்ததால் பேருந்து சக்கரத்தால் தலைக்கவசத்தை உடைக்க முடியவில்லை. அதனால் லேசான காயங்களுடன் பெரிய விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |