போதையில் தகராறு செய்த கணவரின் தலையில் கல்லை போட்டு மனைவி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள உரியூர் பகுதியில் சீராளன்(38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் சவுண்டு சர்வீஸ் நடத்தி வந்துள்ளார். இவருக்கு சோபனா(30) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான சீராளனுக்கும், அவரது மனைவிக்கும்படி அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு போதையில் வீட்டிற்கு வந்து சீராளன் மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபமடைந்த சோபனா தனது வீட்டிலிருந்த கல்லை எடுத்து கணவரின் தலை மீது போட்டுள்ளார்.
\இதனால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை அடுத்து உளுந்தை கிராமத்தில் இருக்கும் தனது தாய் வீட்டிற்கு மகளையும், மகனையும் அழைத்து சென்று விட்டுள்ளார். பின்னர் நேற்று சோபனா தனது கணவரை கொலை செய்துவிட்டதாக கூறி காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சீராளனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் சோபனாவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது சோபனா கூறியதாவது, எனது கணவருக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்து பலமுறை அவரை கண்டித்தேன். ஆனாலும் அதனை பொருட்படுத்தாமல் மது குடித்துவிட்டு என்னையும், எனது குழந்தைகளையும் அவர் அடித்து துன்புறுத்தி வந்தார். இதனால் தலையில் கல்லை போட்டு அவரை கொலை செய்தேன் என வாக்குமூலம் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் சோபனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.