சிறுவர்கள் உட்பட 3 பேர் வாலிபரின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கபாண்டி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் கலையரங்கத்தில் தூங்கியுள்ளார். இந்நிலையில் 3 நபர்கள் தங்கபாண்டியின் தலையில் கல்லை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர். இதனையடுத்து படுகாயம் அடைந்த தங்கபாண்டியை அருகில் உள்ளவர்கள் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி தங்கப்பாண்டி பரிதாபமாக இறந்துவிட்டார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் சிறுவர்களிடம் செல்போனில் கேம் விளையாட கூடாது என தங்கபாண்டி கண்டித்துள்ளார். இதனால் கோபம் அடைந்த அகஸ்டின் மற்றும் 2 சிறுவர்கள் இணைந்து தங்கபாண்டியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து 2 சிறுவர்கள் உட்பட 3 பேரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.