தலையில் கல்லை போட்டு மகன் தந்தையை கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள களமருதூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான அண்ணாமலை (55) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு அரவிந்தன்(23) என்ற மகன் உள்ளார். இவர் கட்டிட வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தைக்கும், மகனுக்கும் இடையே இட பிரச்சனை காரணமாக முன்விரோதம் இருந்தது. இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டபோது கோபத்தில் அரவிந்தன் தனது தந்தையை கீழே தள்ளி விட்டுள்ளார்.
பின்னர் அருகில் கிடந்த கல்லை எடுத்து அண்ணாமலையின் தலையில் போட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அண்ணாமலையின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அரவிந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.