பெண் ஒருவர் தன் வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
லண்டனில் வசித்து வருபவர் ஹன்ஸா பட்டேல்(62). இவர் அங்குள்ள மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் கொரனோ அதிகம் பரவுவதன் காரணமாக சீக்கிரமாக வேலையிலிருந்து ஓய்வு பெறும் படி அவருடைய கணவர் அடிக்கடி கூறியிருந்துள்ளர். இதையடுத்து திடீரென்று ஹன்ஸா அவருடைய வீட்டில் தலையில் பலத்த காயங்களுடன் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் ஒருவரை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்த நபர் அவருடைய மகன் தான் என்றும், அவருடைய பெயர் ஷானில்(31) என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஷானில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள நிலையில், அவர் எதற்காக தன் தாயை கொலை செய்தார் என்பதும் குறித்து தகவல் எதுவும் வெளியாகவில்லை என்று கூறப்பட்டுள்ளது. ஹன்ஸா தன்னுடைய கணவர் மற்றும் இளைய மகனுடன் தான் வசித்து வந்துள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள மூத்த மகன் வேறு ஒரு இடத்தில இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.