தலையில் காயம் என்று வந்த பெண்ணுக்கு ஆணுறை அட்டையால் வார்டுபாய் கட்டுப்போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ரேஷ்மா பாய் என்ற பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டிருக்கிறது. இதற்காக அவர் போர்ஸா கம்யூனிட்டி ஹெல்த் சென்டருக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளித்த செவிலி தலைக்காயத்தில் இருந்து ரத்தம் வருவதைத் தடுக்க காண்டம் அட்டையை வைத்து ஒட்டி அதன் மீது கட்டுப்போட்டு முதலுதவி செய்து உடனடியாக மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
அங்கு ரேஷ்மா பாயின் தலையில் இருந்த கட்டை அவிழ்த்துப் பார்த்த மருத்துவர் அதிர்ச்சியடைந்தார். ரேஷ்மா பாயின் தலையில் காண்டம் பாக்கெட்டுகள் அடங்கிய அட்டைப் பெட்டி இருந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து, போர்சா சுகாதார மையத்தின் வார்டு பாய் மாநில சுகாதாரத் துறையால் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகிறது.