உத்திரபிரதேசம் மாநிலத்தில் காவி உடை அணிந்த தாத்தா ஒருவர் தனது தலை மற்றும் உடலை கூலாக வைத்திருக்க வேண்டுமென்ற எண்ணத்தில் தலையில் ஹெல்மெட் போல மின்விசிறி ஒன்றை அணிந்துள்ளார். அதில் மிகவும் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் இது முற்றிலும் பேட்டரியில் இயங்கும் ஹெல்மெட் அல்ல, சூரிய சக்தியான சோலாரில் இயங்கக்கூடிய மின்விசிறி.
பகல் நேரத்தில் சோலார் ஆற்றல் மூலமாக தானாகவே இது இயங்கும். இந்த ஹெல்மெட் பேனை அணிந்திருக்கும் தாத்தாவின் பெயர் லில்லு ராம். 77 வயது மதிக்கத்தக்க இவர் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் பூ விற்பனை செய்து வருகிறார். இது குறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
देख रहे हो बिनोद सोलर एनर्जी का सही प्रयोग
सर पे सोलर प्लेट और पंखा लगा के ये बाबा जी कैसे धूप में ठंढी हवा का आनंद ले रहे है ! pic.twitter.com/oIvsthC4JS
— Dharmendra Rajpoot (@dharmendra_lmp) September 20, 2022