Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

”தலையில் தேங்காய் உடையுங்க” ஈரோட்டில் வினோத திருவிழா …!!

பவானிசாகரில் இருக்கும் அய்யம்பாளையத்தில் மகா சிவராத்திரியை முன்னிட்டு பக்தர்கள்  தலையில் தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் திருவிழா வினோதமாக நடைபெற்றது.

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அருகே இருக்கின்றது விளாமுண்டி வனப்பகுதி. இந்த பகுதியில் இருக்கும் அய்யம்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ள தொட்டம்மாள், சின்னம்மாள் என்று அழைக்கப்படும் மகாலட்சுமி, பொம்மையன், பொம்மி கோயில் திருவிழா ஆண்டுதோறும் மஹா சிவராத்திரியன்று நடைபெறும். அங்கே வரும் பக்தர்கள் தங்களுக்கு தானே தலையில் தேங்காய் உடைத்துக்கொள்ளும் வினோத நிகழ்வு நடைபெறுவது வழக்கம்.

இவ்விழாவில் கோவை மாவட்டம் கல்வீராம்பாளையம், வடவள்ளி உட்பட அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 2ஆயிரத்துக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். நேற்று மகாலட்சுமி , பொம்மையன், பொம்மி ஆலயங்களில் அலங்கார பூஜையும் , சிறப்பு வழிபாடும் நடைபெற்றது. பின்னர் மேளதாள , வாத்தியங்கள் முழங்க சாமி முன்பு படையலில் வைக்கப்பட்ட முழு தேங்காய்களை எடுத்த பக்தர்கள் தங்களுக்கு  தலையில் உடைத்து வழிபட்டனர்.

Categories

Tech |