விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி ராஜேந்திரன் நகரில் ராஜகோபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் காந்தி கடை வீதியில் இருக்கும் கட்டிடத்தின் கீழ் பகுதியில் மளிகை கடையும், மேல் தளத்தில் சூப்பர் மார்க்கெட்டும் நடத்தி வருகிறார். நேற்று காலை கடையை திறந்த போது லாக்கரிலிருந்த 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பணம் காணாமல் போனதை கண்டு ராஜகோபால் அதிர்ச்சி அடைந்தார்.
இதனை அடுத்து கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தபோது தலையில் பெரிய பாத்திரத்தை கவிழ்த்தபடி உள்ளே நுழைந்த நபர் பணத்தை திருடி செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளது. இதுகுறித்து ராஜகோபால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபரை தீவிரமாக தேடி வருகின்றனர்.