தலையில் செங்கல் விழுந்ததால் கட்டிட தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநிலையூர் பகுதியில் கட்டிட தொழிலாளியான சாந்தி(47) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் செங்குந்தபுரம் பகுதியில் கட்டிட வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக சாந்தியின் தலையில் செங்கல் விழுந்ததில் படுகாயமடைந்த அவர் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார்.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக சாந்தியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.