Categories
தேசிய செய்திகள்

“மண்டையில ஒண்ணுமே இல்ல” அவர் ஏமாத்திட்டாரு சார்…. எனக்கு டைவர்ஸ் கொடுங்க…. பெண்ணின் குமுறல்…!!

உத்தரபிரதேசத்தில் திருமணமான பெண் ஒருவர் கணவரின் தலையில் முடி இல்லாததால் விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஆண்டு திருமணமான பெண் ஒருவர் விவாகரத்து கேட்டு மீரட் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது அந்தப் பெண் தனக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் காசியாபாத்தில் திருமணம் நடந்ததாகவும், கணவர் வழுக்கை என்பதை மறைத்து அவரை திருமணம் செய்ததாகவும், திருமணமாகி பல மாதங்கள் கழித்துதான் இந்த உண்மை அவருக்கு தெரியவந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இத்தனை நாள் இவர் என்னை ஏமாற்றியிருக்கிறார், இதனால் எனக்கு கண்டிப்பாக விவாகரத்து வேண்டும் என்று அந்த பெண் உறுதியாகக் கூறியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |