Categories
தேசிய செய்திகள்

“தலையை கண்டுபிடிக்கும் முன் கையை வைத்து அடையாளம் கண்டுபிடித்தோம்”… 12 துண்டுகளாக வெட்டி…. கோவையை உலுக்கிய கொலை சம்பவம்…!!!!!

வாலிபரை  கொலை செய்த பெண் உள்ளிட்ட 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள துடியலூர் காவல் நிலையம் பகுதியில் கடந்த 15-ஆம் தேதி குப்பைத் தொட்டியில் 2  துண்டுகளாக வெட்டப்பட்ட ஆண் ஒருவரின் இடது கை கிடந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தூய்மை பணியாளர் ஒருவர் உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அந்த   கைகளை கைப்பற்றினர்.  இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் 8 தனி படை அமைப்புகள் மூலம் குற்றவாளியை தேடி வந்தனர். மேலும் இதற்காக தனிப்படை காவல்துறையினர் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் உள்ள 250 சிசிடிவி கேமராவைகளை ஆய்வு செய்து 150 தொழில்நுட்ப கூடங்களிலும், 15 மருத்துவமனைகளிலும் ஆய்வு செய்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரபு என்பவர் கடந்த 14-ஆம் தேதி முதல் காணவில்லை என காட்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்திருப்பது தெரிய வந்தது. இதனையடுத்து காவல்துறையினர் பிரபுவின் வீட்டிற்கு சென்று ஆய்வு நடத்தி 7 கைரேகைகளை கைப்பற்றினர். அதில் 2  கைரேகைகள் வெட்டப்பட்டு கிடந்த கைரேகையுடன் ஒத்து போனது. மேலும் இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பிரபு காந்திபுரம் பகுதியில் அமைந்துள்ள அழகு நிலையத்தில் வேலை பார்த்து வந்ததாகவும், அதே பகுதியை சேர்ந்த திருமணமான ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்துள்ளது. இதனால் அந்த பெண் தனது நண்பர்களான அமுல், திவாகர், கார்த்திக் ஆகியோருடன் காந்திமா நகரில் உள்ள ஒரு வீட்டில் வைத்து பிரபுவின் உடலை 12  துண்டுகளாக வெட்டி பல்வேறு இடங்களில் தனித்தனியாக வீசி சென்றது தெரிய வந்தது.

மேலும் இது குறித்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் செய்தியாளர்களிடம் அறிக்கை ஒன்றை அளித்துள்ளார். அதில் நாங்கள் 8  தனி படைகள் மூலம் குற்றவாளிகளை கண்டுபிடித்தோம். இந்த கேஸ் சினிமாவில் பார்ப்பது போல் உள்ளது. இதனையடுத்து நாங்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடந்த கைகளைக் எடுத்துக்கொண்டு பிரபுவின் வீட்டிற்கு சென்றோம். அப்போது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பிரபுவை 2  பேர் வந்து அழைத்துச் சென்றது பதிவாகி இருந்தது. அதனை வைத்து நாங்கள் விசாரணையை தீவிர படுத்தினோம்.

இந்நிலையில் பிரபுவின் செல்போன் உரையாடலை வைத்து குற்றவாளியை தேடினோம். அப்போது கவிதா, திவாகர் ஆகியோரது செல்போன் ஒரே நேரத்தில் காந்திமா நகரில் ஸ்விட்ச் ஆப் ஆனது. அதைத்தொடர்ந்து அவர் மீது எழுந்து சந்தேகத்தில் அவரை கைது செய்தோம். மேலும் நாங்கள் பிரபுவின் 8 உறுப்புகளை கண்டுபிடித்துள்ளோம். மேலும் கைது செய்யப்பட்ட 3  பேரையும் கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள மூன்று குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினோம். இவர்களை விசாரித்த நீதிபதி கோபாலகிருஷ்ணன் 3  பேரையும்  15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |