சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்த பின் ஹர்திக் பாண்டியாவிற்கு தினேஷ் கார்த்திக் தலைவணங்கி மரியாதை கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது.
அனைவரும் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் இடையேயான ஆசிய கோப்பை லீக் போட்டி நேற்று துபாயில் நடைபெற்றது. இந்த போட்டியில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி டாஸ் வென்று பந்து வீச முடிவு செய்தது. அதன்படி பாகிஸ்தான் அணி களமிறங்கியது. இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசியதால் பாகிஸ்தான் அணி 19.5 ஓவரில் அனைத்து விக்கெட் இழந்து 147 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் முகமது ரிஸ்வான் மட்டும் முடிந்த அளவிற்கு தட்டி தடுமாறி 43 (42) ரன்கள் எடுத்தார்.. மேலும் இப்திகார் அகமது 28 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் புவனேஸ்வர் குமார் 4 விக்கெட்டுகளும், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
பின்னர் 148 ரன்கள் அடித்தால் என்ற வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர் கே.எல் ராகுல் நஸீம் ஷா பந்து வீச்சில் டக் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தார். அதன் பின் ரோகித் சர்மா 12 ரன்னில் வெளியேறினார். ஓரளவு தாக்குப்பிடித்த விராட் கோலி 35 ரன்கள் எடுத்து ஆறுதல் அளித்தார்.. சூரியகுமார் யாதவ் 18 ரன்னில் ஆட்டம் இழந்தார்.. இந்திய அணி அப்போது 14.2 ஓவரில் 89/4 என்று இருந்தது. இதற்கிடையே 3ஆவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் சிறப்பாக பந்துவீச்சாளர்களை கையாண்டனர்.. ஓவருக்கு 10 ரன்கள் தேவை என்ற நிலையில் சிறப்பாக கடைசிவரை எடுத்துச் சென்றனர்.
கடைசியாக இரண்டு ஓவரில் 21 ரன்கள் தேவைப்பட, ரசிகர்கள் பரபரப்புடன் பார்த்து கொண்டிருந்த நேரத்தில், 19 வது ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற நிலை வந்த நிலை போது, முகமது நவாஸ் வீசிய முதல் பந்தை 35 (29) ரன்கள் எடுத்திருந்த ஜடேஜா சிக்சர் அடிக்க முயன்று கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார்.. அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் இரண்டாவது பந்தில் ஒரு சிங்கிள் எடுத்து ஹர்த்திக்கிடம் கொடுத்தார்.. இதையடுத்து 3ஆவது பந்தை ஹர்திக் அடிக்க அது பீல்டரிடம் சென்று டாட் பாலானது.. அப்போது 3 பந்துகளில் 6 ரன்கள் தேவை என்றதால் ரசிகர்கள், திக் திக் இதயத்துடிப்புடன் பார்த்துக்கொண்டிருந்தனர். அப்போது ஹர்திக் பாண்டியா தலையை சரித்து நான் பார்த்து கொள்கிறேன் என்பதுபோல கார்த்திக்கிடம் சொன்னார்..
Confidence should be like #HardikPandya in life. .#INDvsPAK #AsiaCup2022 #DineshKarthik #RAVINDRAJADEJA pic.twitter.com/wUFrldhe52
— Manoj Kumar (@Manoj_Kumar_SM) August 29, 2022
3 பந்தில் 6 ரன்கள் தேவைப்பட அந்த பந்தை பாண்டியா சிக்ஸர் விளாசி இந்திய அணியை வெற்றி பெறச் செய்தபின் கடமையை முடித்து விட்டதாக கூலாக கையை ஸ்டைலாக தூக்கி காட்டினார். பின் தினேஷ் கார்த்திக் ஹர்திக் பாண்டியாவின் அருகில் சென்று குணிந்து தலைவணங்கி மரியாதை கொடுத்து பேட்டை தட்டி பாராட்டினார். சீனியர் வீரர் தினேஷ் கார்த்திக், இளம்வீரர் பாண்டியாவின் ஆட்டத்திற்கு மரியாதை கொடுத்த வீடியோ மற்றும் புகைப்படம் வைரலாகி ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. தினேஷ் கார்த்திகை பாராட்டி வருகின்றனர்..
இந்த போட்டியில் கடைசியில் இந்திய ரசிகர்கள் தான் பதட்டத்துடன் இருந்துள்ளனர்.. ஆனால் அவர் பதட்ட மடையாமல் சிக்ஸர் அடித்து , ஆட்டநாயகன் விருதையும் தூக்கி சென்றார். ஹர்திக் 17 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்டரியுடன் 33 ரன்கள் எடுத்து இருந்தார்.. அதேபோல் பந்துவீச்சிலும் 4 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/tariqueSH/status/1563957010181238784
The winning six by Hardik Pandya.pic.twitter.com/581VFcrHZd
— Johns. (@CricCrazyJohns) August 29, 2022