அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்க பகுதியில் ஆவிகள் நடமாட்டம் இருந்தும் ஒரு இளம்தொழிலதிபர் அங்கிருந்து வர மறுக்கிறாராம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா பகுதியிலிருக்கும் சுரங்கங்கள் நிறைந்துள்ள பகுதியில் இடம் ஒன்றை, டெக்ஸாஸில் வசிக்கும் 32 வயதுடைய இளம் தொழிலதிபரான Brent Underwood என்பவர் வாங்கியுள்ளார். இந்நிலையில் 1.4 மில்லியன் டாலர்கள் கொடுத்து வாங்கிய அந்த இடத்தை பார்வையிட கடந்த மார்ச் மாதத்தில் Brent அங்கு சென்றிருக்கிறார். அப்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் அங்கேயே ஒரு வாரம் தங்குவதற்கு Brent முடிவெடுத்துள்ளார்.
ஆனால் சில தினங்களில் அங்கு பனிப்புயல் பெய்ததால் அங்கிருந்து அவரால் திரும்ப முடியவில்லை. தற்போது கடந்த 12 மாதங்களாக அவர் அங்குதான் வசித்து வருகிறார். மேலும் இனி வாழும் காலம் முழுவதும் இங்கு தான் இருப்பேன் என்றும் கூறியுள்ளார். தற்போது இவர் வாழும் இந்த பகுதியானது அயன் மேன் போன்ற பிரபலமான திரைப்படங்களில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் பகுதியிலிருந்து புறப்பட மாட்டேன் என்றும் மக்களை இங்கு வரவழைக்க போவதாகவும் கூறியுள்ள Brent ஹோட்டல் ஒன்றையும் அப்பகுதியில் திறக்க முடிவெடுத்துள்ளாராம். எனினும் இதற்கு முன்னர் அந்த பகுதியில் ஒவ்வொரு நாளும் குறைந்தபட்சம் ஒரு கொலை சம்பவமாவது நிகழ்ந்திருக்கிறதாம். எனவே அங்கு பல ஆவிகள் சுற்றி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. என்றாலும் நான் அந்த இடத்தை விட்டு பிரிய விரும்பவில்லை என்று Brent கூறியுள்ளார்.