Categories
சினிமா தமிழ் சினிமா

தலைவனுக்கு வாழ்த்து சொன்ன சச்சின்… வைரலாகும் புகைப்படம்…!!!

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து கூறியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது 70வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.இதனை அடுத்து நடிகர் ரஜினிகாந்த் புதிய அரசியல் கட்சி பற்றி அறிவிக்க உள்ள நிலையில், இன்று அவரின் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி கிடைத்துள்ளது.

இந்நிலையில் ரஜினிக்கு பிறந்த நாள் வாழ்த்துக் கூறி இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில், ரஜினியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தலைவர் ஆரோக்கியமான உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ இறைவனை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |