Categories
அரசியல் மாநில செய்திகள்

தலைவரு ஜப்பான் போய் கொண்டுவந்தாரு…! தண்ணீரை திறந்துட்டு இப்படி பொய் பேசாதீங்க… அதிமுகவை கிழித்த அமைச்சர் …!!

செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, அதிமுகவை போல நாங்கள் ஸ்டிக்கரை ஒட்டிக் கொள்ள வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களில் எல்லாம் அவர்கள் எந்த அளவுக்கு ஸ்டிக்கர்களை ஒட்டினார்கள் என்பதற்கு நான் விளக்கங்களை சொல்லியாகவேண்டும். உதாரணத்திற்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்.

2008ஆம் ஆண்டு அன்றைக்கு முதலமைச்சராக இருந்த தலைவர் கலைஞர் அவர்கள் கொண்டுவந்த மிகப் பெரிய மகத்தான திட்டம். 1928 கோடி ரூபாய் செலவில் ஆகஸ்ட் மாதம் 2008 ஆம் ஆண்டு 26ஆம் தேதி தலைவர் கலைஞர் அவர்கள் அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்கள்.

அன்றைக்கு உள்ளாட்சித் துறை அமைச்சர், இன்றைக்கு முதலமைச்சராக இருக்க கூடிய மாண்புமிகு தளபதி அவர்கள் அன்றைக்கு ஜப்பான் பன்னாட்டு நிதி நிறுவனங்கள் தொடர்ந்து பேசி….  அவர்களே ஜப்பானுக்கு எல்லாம் சென்று, தன்னுடைய சீரிய முயற்சியை மேற்கொண்டு, அவர்களிடத்தில் நிதி பெற்று, அந்த திட்டத்தை தானே நேரடி கண்காணிப்பில் இருந்து அந்த திட்டத்தின் ஒவ்வொரு பகுதியும் நிறைவேற்றி,

95 விழுக்காடு அந்த பணிகளை எல்லாம் நிறைவேற்றி விட்டு, ஆட்சிப் பொறுப்பிலிருந்து விலகிய பிறகு 2013-ல் 5% பணியை மட்டும் அவர்கள் மாத்திரம் பார்த்துவிட்டு குழாயிலே தண்ணீரை மட்டும் திறந்துவிட்டு அதிமுக ஆட்சி செய்ததாக ஸ்டிக்கரை ஒட்டிக் கொண்டதை நாட்டு மக்கள் மறந்துவிட முடியாது.

கோயம்பேட்டில் இருக்கக்கூடிய பேருந்து நிலையம் அறிவீர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது சீரும் சிறப்புமாக உருவாக்கப்பட்ட அந்த கோயம்பேடு பஸ் நிலையத்தில் அதிமுக ஆட்சி வந்தவுடன் அதை திறந்து விட்டு, அதில் தங்கள் பெயர் ஸ்டிக்கரை போட்டுவிட்டு, கலைஞருடைய கல் வெட்டை எடுத்துவிட்டு, ஏதோ அதிமுக ஆட்சிதான் அதை உருவாக்கியது போல நாடகமாடினார்கள்.

Categories

Tech |